சவுதியிலிருந்து ஓர் குரல்

பிடித்தது கிடைக்கவில்லை,
கிடைத்ததை படித்துவிட்டு
கிடைக்கப் பெற்றேன்;
பட்டம்.

விழைந்தது நழுவியது,
விளைந்தது தானே
மணவாழ்க்கையும்;
சவுதி வேலையும்;

செலவுக்கு பணமும்,
மனைவிக்கு முத்தமும்
மொத்தமாய் அனுப்பிவிட்டேன்;
தபாலில்...

நரைத்துப் போன அப்பா;
இளைத்துப் போனார்யென
அவசர விடுப்பில்,
வீடு திரும்பினேன்;

இளைத்திருந்தால் பரவாயில்லை,
விறைந்திருந்தார்
குளிரூட்டியில்,
சடலமாக....

காலமாடும் கண்ணாமூச்சியில்
நான் பிறந்தபொழுது
அப்பா சவுதியில்;
அப்பா இறந்தபோது
நான் சவுதியில்;

பாசத்தை தொலைத்து,
பணத்தைத் தேடிக்கொண்டே
இருக்கிறோம் எல்லோரும்,
தலைமுறை தலைமுறையாய்...








என் தோழர் சரவணன் வாழ்வில்
இங்கணம் நேர்ந்தது;
அவருக்கு அர்ப்பணம்;

எழுதியவர் : பசப்பி (6-Jul-14, 9:42 am)
பார்வை : 90

மேலே