அன்பெனும் ஆயுதம்

அன்பெனும்  ஆயுதம்

அன்பெனும் ஊற்று சுரந்திடும்

ஆறாய் தேங்கிடும் மனங்களும்

இன்பத்தை அளிக்கும் என்றுமே

ஈர்க்கும் நெஞ்சங்களை வாழ்வில்

உள்ளங்கள் உலகினில் நிச்சயம்

ஊறுகள் விளைந்தாலும் சோராது

எள்ளி நகையாடினாலும் அசராது

ஏசினாலும் பேசினாலும் துவளாது

ஐயமில்லை துடைத்திடும் துயரை

ஒழுக்கமும் மீறாது வாழும்வரை

ஓய்ந்திடாது ஒருபோதும் கலங்காது

ஔடதமே அவர்களுக்கு அன்புதான்

இ ஃ தை ஏற்பர் எவருமே என்றும் !


​ ​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Jul-14, 9:05 am)
பார்வை : 316

மேலே