மீண்டும் வானம் பாடி

மீண்டும் வானம் பாடிவரும்
நீண்ட கானம் பாடி வரும்
இணைய தளத்தில் இணைய வரும்
எழுத்து தளத்தில் பதியவரும்
கொதிக்கும் வெயிலில் குடையின்றி
கல் குத்தும் போதும் செருப்பின்றி
விதிக்கா இவர்கள் நடக்கின்றார்
வீதிக் காக நடக்கின்றார்
ஊரை உலகை இணைக்கின்றார்
உச்சி வெயிலில் வேகின்றார்
தாரை இங்கே வார்க்கின்றார்
தணல்மேல் புழுவாய் நோகின்றார்
கல்லும் கூட கனிகிறது-சல்லிக்
கல்லும் தாரை கசிகிறது
வல்லவர் சுவடெங்கே தெரிகிறது?-மீண்டும்
வானம் பாடி கேட்கிறது...
(தார் சாலை போடும் பணியில் ஈடுபடுவோரை பாடியது....)
எழுத்து;-கந்ததாசன் என்ற அய்யப்பன்

எழுதியவர் : சு.அய்யப்பன் (6-Jul-14, 5:34 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 262

மேலே