கட்டிட தொழிலாளியின் புலம்பல்
பிழைப்புக்காக இடம் பெயர்ந்த எங்களை
விண்ணிற்கு இடம் பெயர செய்தாயே! இறைவா!!
நீ விட்ட கண்ணீருக்காக கூரைக்குள் அடங்கியவர்களை
மண்ணுலகில் அடக்கம் செய்தாயே! இறைவா!!
சுகமென்று பாராமல் உழைப்பவர்களுக்கு
உயிரை விடுவதுதான் விதியா! இறைவா!!
கல்லும் மண்ணும் சேர்த்த கலவையில்
எங்களுக்கு நாங்களே கல்லறை அமைத்தொமடா! இறைவா!!
உயர்ந்த கட்டிடத்தை கட்டிய நாங்கள்
உருதெரியாமல் சிதைந்தொம்மட இறைவா!!
இடி மின்னல் இயற்கையினால்
எங்களை இயற்கை எய்திட செய்தாயே! இறைவா!!
தவறு செய்தவர்களோ மாளிகையில்
தண்டனை அடைந்தவர்களோ மன்னுக்கடியில். நியாயமா! இறைவா!!
கனவு இல்லம் கட்டியவர்களுக்கு
கல்லறை இல்லம்தான் பரிசா! இறைவா!!
பலர் குடியேற மண்ணையும், கல்லையும் சுமந்த எங்களுக்கு
இச்சுமை தேவைதானா! இறைவா!!
எஞ்சியுள்ள எங்கள் குடும்பங்களை
வஞ்சனை செய்யாமல், வாழ்ந்திட அருள்புரிவாய் இறைவா!
கல்லறையில் குடிகொண்ட கட்டிடதொழிளாலர்களுக்கு
கட்டிடபோறியாளர்களின் சார்பாக கண்ணிர் அஞ்சலி!!!