மீண்டும் வானம்பாடி
அநியாயம் செய்தால் அதட்டிக் கேட்க
அவலங்கள் கண்டால் சாட்டை சுழற்ற
அதர்மம் அறிந்தால் எதிர்த்து நிற்க
அறியாமை இருளை விரட்டி அடிக்க
மதவாதம் என்னும் மடமை மடிய
இனபேத மில்லா சமூகம் மலர
லஞ்சம் ஒழிந்து நேர்மை நிமிர
லட்சியப் பாதையில் வெற்றிநடை போட
ஊழல்கள் இல்லா நல்லாட்சி அமைய
வன்முறை என்றும் விடைபெற் றோட
பாட்டாளி மக்களின் உரிமைகள் பேண
தீண்டாமை பேயை தீயிட்டுக் கொளுத்த
கொடுமை கண்டால் கொதித்துப் பொங்க
இயற்கை சிதைக்கும் இதயமும் மாற
விடியல்தேடி கானம்பாடி சிறகு விரிக்குமோ ?
மீண்டும் வானம்பாடி புதுப்பிறவி எடுக்குமோ ??