ஓய்வும் ஒருவித மருந்தே

மாடமாளிகை தான்வாசம் என்றாலும்
குளிரூட்டிய அறையில் படுத்தாலும்
வெட்டவெளியில் வேப்பமர நிழலில்
தரையில் தூங்கினால் சுகம்தானே !
மெல்லிய தென்றலும் மேனியில்பட
துள்ளிடும் கனவுகள் நெஞ்சைத்தொட
ஆழ்ந்த உறக்கம் ஆனந்தம் தந்திடும்
இசையாய் தெரியும் கேட்கும் ஒலிகள் !
நல்லதொரு தூக்கம் நன்மையே நமக்கு
ஓய்வும் உடலுக்கு ஒருவித மருந்தே !
உடல்நலம் பேணுங்கள் உள்ளவரை
நலிவிலா பொலிவுடன் வாழுங்கள் !
பழனி குமார்