அம்மாஅம்மாஅம்மா
ஒரு ஆறாம் வகுப்பு அறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நம் முதலமச்சரை அவரே மாணவர்கள் முன்பு "குண்டம்மா' என குறிப்பிடுகிறார்.
பாவம் அவர் எந்த முன்னேற்றக் கழ(ல)கமோ
அதைக் கேட்ட ஒரு கடைசி வருசை பையனுக்கு மூளையின் ஏதோ மணியடித்தது
பக்கத்து நண்பன் காதை கடிக்கிறான்,
"டேய் பாரேன் நமக்குலாம் மூனு அம்மா, நம்ம அம்மா ஒன்னு, தமிழ் அம்மா ஒன்னு (தமிழ் ஆசிரியர்), அப்புறம் குண்டம்மா"
என மகிழ்ச்சியாக கூறுகிறான்.
அடுத்து தமிழ் வகுப்பு, தமிழ் ஆசிரியர் வருகிறார்
கடைசிக்கு முன் வரிசையில் இருந்து ஒரு சிறுவன் ஆசிரியையிடம் சென்று,
"அம்மா, அவன் உங்களை 'நம்ம அம்மா தமிழ் அம்மா குண்டம்மா'னு (இதை தாளத்துடன் படிக்கவும்) சொல்லான்" என போட்டுக்கொடுக்க
சும்மா அடி சூறாவளிபோல் அடிச்சு தாக்கிருச்சி..........
பாவம் அவனுக்கு பாதி தூக்கத்தில் அப்படித்தான் கேட்டிருக்கு போல...