இடை வெளி இல்லாமல் எழுதுகிறேன்

இடை வெளி இல்லாமல்
எழுதுகிறேன்

இன்னல்கள், இன்பங்கள்
அனைத்தையும் எழுத்தில்
கூறுகின்றேன்

இரவினை, இருட்டினை
நிலவினை, நதியினை
வானத்தை, விண்மீன்களை
புகழ்கின்றேன்

இருப்பதை, இல்லாததை
எடுத்து சொல்லுகின்றேன்

இறைக்கும் கிணற்று நீரென
எனக்குள் ஊற்றென பெருகிடும்
எண்ணங்கள் எல்லாம் எழுத்தாக
மாற்றுகின்றேன்

இதயத்தில் ஏதோ ஒரு இனிமை
எழுதி முடித்து, பின் படித்திடவே

இருக்குதைய்யா இன்னும் பல
விஷயங்கள், தோன்றுதைய்யா
நொடிக்கொரு கருத்துக்கள்

இன்றும், நாளையும், இனி
வரும் நாட்களில் எல்லாமே
எழுதிடுவேன்,

இழந்திடுவேன் முழுவதுமாய்
எழுத்தினில் என்னையே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (7-Jul-14, 4:32 pm)
பார்வை : 90

மேலே