இறக்கையில்லா வானம்பாடி

இவன் காதல் தீரா காதல்
தீஞ்சுவை இன்பம் தரும் தீந்தமிழிடம்

இவன் காதல் கோபக் காதல்
பசுத்தோல் போர்த்த சாத்திரப்புலி சமூகத்திடம்

இவன் காதல் செல்லா காதல்
பிஞ்சு குழந்தைகளின் கொஞ்சு புன்னகையிடம்

இவன் காதல் புரியா காதல்
மொட்டுக்கள் விரியும் நிலாச்சூரிய பூவிடம்

இவன் காதல் திகட்டா காதல்
இன்பச்சுவை தரும் மெல்லிசை கருவிகளிடம்

மொத்ததில் இவன் காதல் கள்ளக்காதல்
காணாத கோலம் காணும் கலியுகத்திடம்

இந்த எத்தனுக்குள் இத்தனை காதலா
அத்தனையும் வெறுங்கூச்சலா - மீண்டும் மீண்டும்

காதல் தூண்டும் சூழல் வானில்
சிறகடிக்கும் இவனொரு இறக்கையில்லா வானம்பாடியடா

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (7-Jul-14, 6:07 pm)
சேர்த்தது : ஆறுமுகப்பெருமாள்
பார்வை : 153

மேலே