மீண்டும் வானம்பாடி

வானம் தெறிய விரிந்த நதி;
கால் நனைய காத்திருக்கும்
கரையோர கருவேல மரம்;
இரு கரையையும் இருக்கி
இரவும் பகலும் பெருக்கி
ஆடை படிந்த புல்வயல்;
இலைகளுக்கு இன்பமுத்தமிடும் இளந்தென்றல்;
மாலை நேர மஞ்சள் வானத்திற்கு
மறுபடியும் வெள்ளையடித்த மழைத்துளி;
காக்கை பொறித்த கருங்குயில் குஞ்சு
இனம் தெரிந்ததும் வானம் பறக்க
வழி காட்டி பறக்கும் தாய்க்குயில்;
அனில் கொறித்த மாங்கனி;
அதை கடிக்கும் கோவணப் பையன்;
நீர்கரையிள் பூ பூர்த்த கோரை;
நீல வானம்,..... மீண்டும் வானம்பாடி,......

எழுதியவர் : Shankar (8-Jul-14, 12:35 am)
சேர்த்தது : shankar
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 123

மேலே