பூ

கச்சிதமாய் கவிஎழுத
பூ ஓன்று கண்டேன்

செடியினிலே அரும்பாகி
மொட்டாகி மலராகி

கண் கவர கன்னியாகி
வண்டெனும் காளை வர

காத்து நின்றாள் கனிவுடனே
வந்தவனும் அவளருகில் பறந்து வந்து

அவள் இதழில் தேன் அருந்தி
மயக்கத்திலே சிறகடித்து

மெல்லிசையை பாடிக்கொண்டே
துள்ளலுடன் பறந்து விட்டான்

எழுதியவர் : பாத்திமா மலர் (7-Jul-14, 5:53 pm)
Tanglish : poo
பார்வை : 116

மேலே