உண்மையா

உண்மையா

அது என்னவோ
அரசாங்க ஒப்பந்தங்களால் போடப்படும்
தார் மட்டும்
ஒட்டுவதே இல்லை
சாலைகளில்..........!!!!

மக்கள் செய்யவில்லையாயினும்
சாலை பள்ளங்கள் செய்கிறது
மழைநீர் சேமிப்பு.........

ஓய்வு பெற்ற பின்னும்
ஓய்வில்லை....
ஒதுக்கிய நிதிபெற
ஓய்வில்லாமல்
அலுவலகத்துக்கு வரும்
பணியாளர் .......!!!

படித்த பின்னர்தான் தெரிகிறது
வேலையில்லை என்பதே
பட்டதாரிக்கு ........ !!!

விளைநிலம் விற்று
வீடு
வாங்கியபோதுதான் தெரிகிறது
சோற்றுக்கு இன்னும்
உழைக்க வேண்டுமென்று .......!!!

ஐந்து வருடங்கள் அல்ல
ஆயுள் கடந்த பின்தான்
மாற்றம் மிக அருகில்
இல்லை என
ஆயாசத்துடன் உணரமுடிகிறது...........!!!

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (8-Jul-14, 4:46 pm)
Tanglish : unmaiyaa
பார்வை : 77

மேலே