எத்தனை கேள்விகள் கேட்பினும்

நான் என்பதில்
தொடங்கி
நான் என்பதிலேயே
அடங்கி போகிறது
வெறும் பிணம்.
எத்தனை கேள்விகள் கேட்பினும்
எத்தனை பதில்கள் கிடைப்பினும்
அத்தனை அத்தனை கேள்வியாய்
அத்தனை அத்தனை பதில்களாய்
எரிந்து கொண்டுதான்
இருக்கிறது
வெறும் பிணம் கூட
அல்லாத
ஒன்று.

எழுதியவர் : செந்தேள் (8-Jul-14, 3:13 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 94

மேலே