என் வாழ்க்கை
இரத்தமும்,சதையுமாய் பெற்றெடுத்த
என் தாய் ...
நல்லது,கெட்டதை கற்றுக்கொடுத்த
என் தந்தை ...
வானம் பிழந்து வையகம் தொடவைத்த
என் கல்வி ...
நீ தான்டா என் உயிர் என்ற
என் தோழன் ..
உன் காதலியை விட சிறந்தவள் நான் என்ற
என் தோழி ...
நீ தான் என்னுடைய வாழ்க்கை என்ற
என் காதலி ...
நீ தான் சிறந்த அப்பா என்ற
என் பிள்ளை ...
இப்படிப்பட்ட உறவுகள் கலந்ததுதான்
என் வாழ்க்கை !!!
இத்துனையும் படைத்த கடவுளுக்கு
என் நன்றி ...!!!...