வெளுத்துப்போன சாயங்கள்
தடதடத்துச் செல்லும் புகைவண்டியின் இரைச்சலையும் மீறி, எதிரே அமர்ந்திருந்த குழந்தையின் அழுகுரல் திவாகரின் செவிப்பறையை அதிரவைத்துக்கொண்டிருந்தது. குழந்தையின் தாயோ அழுகையைப் பொருட்படுத்தாதவளாய் தலையைத் தொங்கப்போட்டபடி சாளரத்தின் ஊடே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
குழந்தையின் அழுகை அவனுக்கு சினத்தை ஏற்படுத்தியது.
`ஏம்மா...குழந்தையைக் கவனிக்கமாட்டியா...?`
தொண்டை வரை வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான். இதுவரை அவனது முகத்தை சரியாகப் பார்க்காதவள் இந்தக் கேள்வியின் பின் அவனது முகத்தை ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடும். அல்லது பேச்சை வளர்க்கக் கூடும்.
பல்லைக் கடித்துக்கொண்டு பத்திரிகையை எடுத்தவன் அதனை மும்முரமாகப் படிப்பதுபோல பாசாங்கு செய்தபடி முகத்தை மறைத்துக் கொண்டான்.
கலவரப்பட்ட அவனுடைய இதயமோ நடந்த சம்பவங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தது.
`சே...அந்த ராட்சசி மட்டும் என் வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்தால் என் வாழ்க்கை குழப்பமின்றிப் போயிருக்கும்...எல்லாவற்றையும் நாசப்படுத்தி, என்னைக் கலவரப்படுத்திவிட்டாளே...`
சுகந்தியை நினைத்தபோது அவன் இதயம் படபடத்து கறுவிக்கொண்டது.
தொடரும்.......