காலந்தோறும்

வேரில்லா மரங்களாய்
வீதியில் விடப்பட்டு,
பூமிக்கு வந்த
புது உயிர்கள்!- அவர்கள்

தவறாக விதைக்கப்பட்ட
தரிசுநில விளைபயிர்கள்!

அழியாமல் கருவில்
அவதரித்து விட்டதால்
அனாதைகளாக்கப்படும்
அவசரக்குழந்தைகள்!

காகிதப்பூவின் வாசமுமற்ற
காலம் தந்த கண்ணீர்ப்பூக்கள்!

எழுதப்படா விதிகளாய்
எஞ்சிநிற்கும் ஏக்கத்தோடு
வாழ்க்கையின் விளிம்பில்
விழுகின்ற துயரங்கள்.....!

எழுதியவர் : ஆதிரை (11-Jul-14, 11:43 am)
Tanglish : kaalanthorum
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே