Aathirai - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Aathirai |
இடம் | : pudukkottai |
பிறந்த தேதி | : 02-Sep-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 48 |
எழுத்தின் ஆழத்தை அறிந்திடும் ஆவலில் இணைத்துக் கொண்டேன் என்னையும்..வலியில் துய்த்த வரிகளின் செறிவு தந்த தேடல் இது..
தொலைந்து போனேன் - நான்
தொலைவில் போனேன்
என்னைவிட்டு!
எண்ணங்கள் எழவில்லை
என் சிந்தையிலிருந்து!
எழுத்துக்கள் சீறவில்லை
என் பேனாவழியே !
செயல்பாடு நின்று விட்டதோ!
என் நினைவுகளில்!
கண்ணீரைச் சுரக்க
கண்கள் மறுத்ததோ!
காரணம் என்னவோ?
கண்டுவிட்ட வேகத்தில்
ஆயுதம் கொண்டு
அறுக்கப்பட்ட ஆசைகளை
உளறிவிட்டு அதனால்
உடைபட்ட மௌனங்கள்..
உள்ளுக்குள்ளே உதிர்த்தன,
பொருளற்ற புன்னகையை!!!!!
ஆயிரம் முறை
என் உடையின்
அளவையும்
அழகையும்
சரிபார்த்த
என் அம்மாவை
நன் சரியாக
பார்க்காததல்தான்
இப்படி முடிந்ததோ
அவளின் தீபாவளி
" பச்சை நிற சீலையும் "
"கருப்பு நிற ஜாக்கெட்டுமாய் "
விளைபயிரைப் புறந்தள்ளி
வேக வேகமாய்
வீடுகளைப் பயிரிடும்
விஞ்ஞானமே!
நாளையோ
அதற்கு மறுநாளோ
தீராக்கிடங்குகளும்
தீர்ந்துவிடும்போது...
இம்மனித இனம்
பஞ்சத்தைப் பங்கிட்டாவது
ஒரு சில காலம்
கடந்து விடும்...
மீண்டும் எழும் வினாக்குறி
உனக்கான உணவு எங்கே?
இங்கே விடைகளின் மேல்
வீடுகளல்லவா எழுந்துள்ளன.
நகரும் நாட்களில்
நலிந்து எழும் புழுக்களாய்
மாறிப்போகும் மனிதன்
சுவாசிக்கக் காற்று தேடி
சுற்றும் வேளையில்-அங்கே
வாய்விட்டுச் சிரிக்கும்
நிழல் தந்த மரங்கள்
நிழற் படமாகும் போது..
.
.
.
.
சமர்ப்பணம்- விளைநிலங்களை விலைநிலங்களாக்கும் இப்பூமியின் புதல்வர்களுக்கு...!
என் விரல்களுக்கு
வலிமையுண்டு
என் பேனைக்கும்
நேர்மையுண்டு - ஆனால்
எழுதுவதற்குத்தான்
துப்பில்லை.....
என் நாவிற்கு
உரிமையுண்டு
என் சொற்களுக்கும்
கோபமுண்டு - ஆனால்
சொல்வதற்குத்தான்
வார்த்தையில்லை....
என் கால்களுக்கு
சக்தியுண்டு
என் மூளைக்குள்ளும்
புத்தியுண்டு - ஆனால்
நடப்பதற்குத்தான்
உணர்வே இல்லை....
ஒன்று ஒன்றாய்
எனக்குள்
ஒரு கோடி
சிந்தனைகள் - ஆனால்
ஒன்றையேனும் உருவமாக்க
தெரியாததில்
சோம்பேறித்தனம் பல....
கடவுளைப்போல்
காக்கின்ற புத்தியுமுண்டு
கடவுளைப்போல்
அழிக்கின்ற தோரணையுமுண்டு
ஆனால்
நான் எனக்குள்ளே
முடிவு கொண்டு
அசையாத பாறையாய்
அகமிழந்து
இனியும் இப்ப
விளைபயிரைப் புறந்தள்ளி
வேக வேகமாய்
வீடுகளைப் பயிரிடும்
விஞ்ஞானமே!
நாளையோ
அதற்கு மறுநாளோ
தீராக்கிடங்குகளும்
தீர்ந்துவிடும்போது...
இம்மனித இனம்
பஞ்சத்தைப் பங்கிட்டாவது
ஒரு சில காலம்
கடந்து விடும்...
மீண்டும் எழும் வினாக்குறி
உனக்கான உணவு எங்கே?
இங்கே விடைகளின் மேல்
வீடுகளல்லவா எழுந்துள்ளன.
நகரும் நாட்களில்
நலிந்து எழும் புழுக்களாய்
மாறிப்போகும் மனிதன்
சுவாசிக்கக் காற்று தேடி
சுற்றும் வேளையில்-அங்கே
வாய்விட்டுச் சிரிக்கும்
நிழல் தந்த மரங்கள்
நிழற் படமாகும் போது..
.
.
.
.
சமர்ப்பணம்- விளைநிலங்களை விலைநிலங்களாக்கும் இப்பூமியின் புதல்வர்களுக்கு...!
அன்றொரு இரயில்
பயணத்தில்
அவளைச் சந்தித்தேன்.....
யாரென்று சொல்லவா?
இறைவன் படைப்பின்
எதிர்பாரா பிழை
என்று சொல்லவா....
எழுதும் வார்த்தையின்
இலக்கணப் பிழை
என்று கொள்ளவா....
நிலவின் ஒளி தேடலில்
ஓர்
அமாவாசை என்று
நினைக்கவா.....
'அவள் 'என்று
சொல்லவா....
'அவன் 'என்று
சொல்லவா....
எப்படிச் சொல்வதென்றே
ஆயிரம்
எண்ணங்கள்.....
திருநங்கை என்றே
பெயரிட்டோம்....
'திரு'வும் 'திருமதியும்'
இரண்டுமே இல்லாது
போனது. !....
மதிப்பு கிடைக்கவில்லை
அவர்களுக்கு
மரியாதை இல்லாத
இவ்வுலகிலே.......!
பட்டிமன்றங்களில் பேசலாம்
பலர்கைத்தட்டலும் பெறலாம்
அவர்களைப்
இன்னும்
தோணவில்லை உன்னை
வரையறுக்க ஓர்
வார்த்தை!
நீ
உடலின் ஈர்ப்பா?
உள்ளத்தின் இணைப்பா?
பிணைதலின் தொகுப்பா? இல்லை
பிரிதலின் தவிப்பா?
.
.
ரசாயண மாறுதலா?
ரணத்தின் ஆறுதலா?
சோகத்தில் தேறுதலா? இல்லை
சுகந்தந்து காலை வாறுதலா?
.
.
உறவுகளின் தேடலா?
உரசியபின் ஊடலா?
தழுவி நிற்கும் கூடலா? இல்லை
தவறிழைக்கும் நாடலா?
.
.
புரிதலில் புணர்வாயா? இல்லை
புணர்ந்தால் புரிவாயா?
.
.
ஏந்துகையில் சுகமும்
எகிறிவிட்டுப் பின் ரணமும்
உன்னாலே! -சொல்
இதில்
எந்த வகை நீயே?
எழுதிய தாளையே
எரிக்கின்ற தீயே!!!
இன்று
அப்படி இப்படி என்று
பூமிப்பெண்
கலங்கப்பட்டுவிட்டதால்....அவளைக்
கட்டித்தழுவ
மறுக்கும்
மாசில்லா மணாளன்!