மனிதம் எங்கே-------நிஷா

அன்றொரு இரயில்
பயணத்தில்
அவளைச் சந்தித்தேன்.....

யாரென்று சொல்லவா?

இறைவன் படைப்பின்
எதிர்பாரா பிழை
என்று சொல்லவா....

எழுதும் வார்த்தையின்
இலக்கணப் பிழை
என்று கொள்ளவா....

நிலவின் ஒளி தேடலில்
ஓர்
அமாவாசை என்று
நினைக்கவா.....

'அவள் 'என்று
சொல்லவா....
'அவன் 'என்று
சொல்லவா....

எப்படிச் சொல்வதென்றே
ஆயிரம்
எண்ணங்கள்.....

திருநங்கை என்றே
பெயரிட்டோம்....
'திரு'வும் 'திருமதியும்'
இரண்டுமே இல்லாது
போனது. !....

மதிப்பு கிடைக்கவில்லை
அவர்களுக்கு
மரியாதை இல்லாத
இவ்வுலகிலே.......!

பட்டிமன்றங்களில் பேசலாம்
பலர்கைத்தட்டலும் பெறலாம்
அவர்களைப் பற்றி...!

பார்த்ததுமே நம்மில்
பலருக்கு
முகம் சுளிக்கும்....
பலரது
கண்கள் தரை
தாழ்த்தும்...

அவர்கள் என்ன
பாவிகளா.?

ஏனில்லை நமக்கு
மனிதநேயம்?
எங்கே தொலைத்தோம்
மனிதத்தை?.....

எழுதியவர் : நிஷா (25-Sep-14, 5:24 am)
பார்வை : 526

மேலே