உன்னோடு

இதயம்
உன்னைத்
தேடுதடி....இமையும்
இங்கே
இணைய
மறுக்குதடி.....

பார்த்தாலும்
பார்க்காமல்
போனாலும்
பாவி மனம்
வலிகொண்டு
சாகுதடி....

காதலுக்காக
காலங்கள்
அழியுதடி
காரணம்
புரியாமல்
கண்ணீர்
வழியுதடி.....

நீங்காத
நினைவுகள்
நெஞ்சில்.....
நெருஞ்சி
முள்ளாய்
நித்தம் நித்தம்
என்னைக்
குற்றிப்போகுதே......

எண்ணம் போல
வாழ்க்கை
எந்தன்
வண்ண மயிலோடு
வாழ.....ஆசைகொண்டு
அவஸ்தைப்பட்டு
நிற்குதடி.......

கண்ணோடு
தூக்கம்
ஏது......உன்னோடு
சேரும்
வரைக்கும்.......

எழுதியவர் : thampu (25-Sep-14, 2:42 am)
Tanglish : unnodu
பார்வை : 162

மேலே