களவு கொண்ட மனம்

மகரந்தம் ஈர்க்க
மலர் விட்டு ...
மலர்தாவும் வண்டுகளாய்
மயிர்பூத்த முகம்கொண்டு
மங்கை தேடி சென்றதில்லை ...

நெஞ்சில் ஏதோ நெருடலுடன்
அரவமற்ற இடத்திலும்
ஆடை பூட்டி
நீராடும் நங்கையின்
நாணம் போல்
நடைபயிலவே
ஆவல் பூண்டேன் ...

காவியம் உரைத்த
களவினிலும்
காதல் கொண்டும்
கற்பு காத்த கன்னியை
ஏனோ தேடுகின்றேன்

இராமனின் மோகம் கொண்டு
இராவணப் பார்வை விலக்கி
மையல் கொண்டேன்
மழைக்கால மேகமாய்
மங்கையின் மனமறிய ?

கலாச்சார சடங்குகளில்
கால்பூட்டும் முன்னரே
காதல் வயப்பட யத்தனித்தும்
கனவுகள் கண்டும்
கலைந்தன காட்சிகள்
கார் மேகமாய் ?

கொலுசின் சப்தங்கள்
கொஞ்சமாய் தொடர்ந்த போதும்
பரவசமாகி பார்வை வீசும்
பாவை காணும் போதும்
தடதடக்கிறது ..மனது ?

தவிப்புகள் நெருடலாய்
தாக்கும் முன்னே
கரம்பற்றிய கன்னிகையின்
கனிவான பார்வையில்
தானாய் மறைந்தன
கானல் நீர்போல்
களவு கொண்ட மனம் ?

** குமரேசன் கிருஷ்ணன் **

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (25-Sep-14, 6:10 am)
Tanglish : kalavu konda manam
பார்வை : 225

மேலே