+தயக்கமே தொடர்கதையாய்+

சென்றடையும் ஊர் பக்கத்தில் வந்ததும்
நின்று நின்று மெதுவாய் போகும்
ரயிலைப் போல
உன்னிடம் அடிக்கடி நான்
சொல்ல நினைக்கும் வார்த்தைகள்
உன் மனதினை அடையும் அருகாமையில் இருந்தும்
மனம் விட்டு வெளிவர மறுக்கின்றன...
அது உன் மனதினை சென்றடையும் நேரம்
அதைக் கண்டால் எழுதுவேன் கவிதைகள் நூறும்
உனைப் பற்றி மாத்திரம்
இதை அடைய என்னவோ சூத்திரம்!??