விளையும் இடம் தேடி
விளைபயிரைப் புறந்தள்ளி
வேக வேகமாய்
வீடுகளைப் பயிரிடும்
விஞ்ஞானமே!
நாளையோ
அதற்கு மறுநாளோ
தீராக்கிடங்குகளும்
தீர்ந்துவிடும்போது...
இம்மனித இனம்
பஞ்சத்தைப் பங்கிட்டாவது
ஒரு சில காலம்
கடந்து விடும்...
மீண்டும் எழும் வினாக்குறி
உனக்கான உணவு எங்கே?
இங்கே விடைகளின் மேல்
வீடுகளல்லவா எழுந்துள்ளன.
நகரும் நாட்களில்
நலிந்து எழும் புழுக்களாய்
மாறிப்போகும் மனிதன்
சுவாசிக்கக் காற்று தேடி
சுற்றும் வேளையில்-அங்கே
வாய்விட்டுச் சிரிக்கும்
நிழல் தந்த மரங்கள்
நிழற் படமாகும் போது..
.
.
.
.
சமர்ப்பணம்- விளைநிலங்களை விலைநிலங்களாக்கும் இப்பூமியின் புதல்வர்களுக்கு...!