ஏக்கம்
பூக்களையே காயப்படுத்தும்
காகித கத்திகளாய்
பாட புத்தங்கள்...... !!!
சுமைகளே அழுகின்றது
பிஞ்சுகளின்
வலிதாங்கமுடியாமல் .....!!!
மீன்கள் துள்ளுவதெல்லாம்
ருசிப்பதற்க்கே என
ரசிக்கும் பள்ளிக்கூட
பண பசிதீரா திமிங்கலங்கள் ...!!!
கற்றுதர தெரியாதாய்
கற்களை மட்டும்
கட்டிக்கொண்ட கல்விக்கூடங்கள்...
இறகுகளையே
இறக்கைகளாய் எண்ணி
சிகரத்தில் பறக்க
பழக்குவிக்கும் பட்டாம்பூச்சியாய்
பள்ளிக்குழந்தைகள்....!!!!
ஏ சி அறைகளுக்குள்ளும்
புழுக்கமாய்
புழுங்கும் மனிதர்கள் ....
பளபள கண்ணாடிகளில் தெரிகிறது
மகிழ்ச்சி
மங்கிப்போன முகங்கள்
ஏனோ ......
மடிக்கப்பட்ட ஆடைகளில்
கீறல்களால் கிழிந்துபோன
மறைக்கப்பட்ட
மெய்யும் உயிரும்......
ரத்தமின்றி ரணமாகிவழிகிறது
ராப்பொழுதுகள் கூட
வெயிலாய் சுடுவதனால்.....!!!
கவிதாயினி நிலாபாரதி