வாழ்த்து
மீன்களை ருசிக்கும் இந்த உலகில்
ரசிக்கவும்
கற்றுத்தந்தாய் தமிழில் ....!!!
செம்மொழி என்பதில்
பெருமைகொண்டது தமிழ்
நீ
மெய்மொழி பேசியதில்....!!
கற்றது தமிழ் மட்டுமல்ல
நாங்களும்தான் ......!!!
நல்லவை எவையென்று
முத்தம்
கொடுத்தபோதுகூட இனித்ததைவிட
காமம் இல்லையென்று
நீ சொன்னபோதுதான்
இனித்தது இன்னும் அதிகமாய்
இந்த உலகில்
பிள்ளை பெறும் முன்னே
அன்பை பெற்ற
அப்பாக்களுக்கு......!!
இதயமுள்ள எல்லோருக்கும் வலிக்கும்
ஆனால்
இதயத்திற்கும் வலிக்கும் என்பதை
உணர்ந்த வலியால்
திரை விழியால் சொன்ன
தீர்க்கதரிசி நீ....
கடல் நீர்
உப்பால் மட்டும் கரிப்பதில்லை
நீந்துவதாய் நினைக்கும்
மீன்களின் கண்ணீராலும்தான்
என கண்களால் கண்டறிந்த
கடவுளும் நீ......
பட்டாம்பூச்சிகள் வாழ வானம் தேவையில்லை
வனம்மட்டும் போதும்
சிறகடித்து வாழும் என
வலுவாக சொன்னதும் நிகரில்லா
நீ மட்டும்தான்
தங்க மீன்களை தரிசிக்க செய்து தேசிய விருது பெற்ற திரு .ராம் அவர்களுக்கு இந்த பாராட்டு வரிகள் சமர்ப்பணம்
கவிதாயினி நிலாபாரதி