கொஞ்சம் கவிதைநிறைய காதல்
நீ அழகென்பது
என் ரசனையின் அழகில்
இன்னும் அழகாகிறது….
***************************************
பெரும்பாலும்,
காதல் திருமண வெற்றிக் களிப்பில்…
முதலில் மறக்கப்படுகிறது காதல் !
**********************************************************
சட்டென புன்னகைத்துவிடுகிறாய்
அதனால் ஏற்படும்
எதிர் விளைவுகளின் பேரில்
கவலை இல்லாது
****************************
விலகிட நேர்ந்த
காதலன் /காதலியைப் பார்க்க நேரும்போது
"நல்ல வேளை தப்பித்தோம்" என
நினைக்கும் பொழுது வரை
காதல் உயிரோடுதான் இருந்திருக்கும்.......!
****************************************************************
தலைமுடியையும்,
என்னையும்....
கலையாத போது கலைத்தும்.....
கலைந்த போது,
சரிசெய்தும் விடுகிறாள்....
**************************************
உதடுகள் சொல்லும் வார்த்தைகளும்
கண்கள் பேசும் மொழியும் புரிகிறது
உன் புருவங்கள்
என்னதான் சொல்ல வருகிறது?
**********************************************
வெகு அமைதியாகவே
நீ வந்து போன பின்பும்
அதன் அதிர்வுகள்……
உன் நினைவிலே
என்னை வைத்திருக்கிறது….!
********************************************
உன் இமைகள் துடிக்கும்
ஒவ்வொரு கணமும்
நான் உனக்குள் இழுக்கப்படுவதாகவே
உணர்கிறேன்….
**************************
உன் நேர் வருகையின் போதெல்லாம்
என்னை மூர்ச்சையாக்கிவிட்டு
வன்மத்தோடு சொல்வாய்
நான் இயல்பாக இல்லையென்று….
****************************************************