முதல் காதல்

உன் கண்ணாய் இருக்க ஆசைப்பட்டேன்
கண்ணீராய் வெளியே தள்ளிவிட்டாய்,
உன் நகமாய் இருக்க விருப்பப்பட்டேன்
வெட்டி என்னை வீசிவிட்டாய்,
உன் காலணியை இருக்க ஆசைப்பட்டேன்
என்னை கழற்றி விட்டுவிட்டாய்
என் உயிராய் உன்னை நினைத்திருந்தேன்
உயிரை பிரித்து கொன்றுவிட்டாய்
நீ இல்லா வாழ்வு எனக்கு
ஆதி இல்லா அந்தமடி
என் இதயம் உனக்கே சொந்தமடி..