என்ன செய்து ஏது கிடைத்தது

என்ன செய்து ஏது
கிடைத்தது
இங்கே நல்லவனாய் யாரு
இருப்பது.......................?

விரக்தி ஒன்று ஆட்டி
படைக்குது
என் நல் விரதம் தன்னை
பார்த்து சிரிக்குது

அன்று பிறருக்கு உழைத்து உழைத்து
களைத்து போனது
இன்று தனிமரம் போல்
காட்சி தோன்றுது

அவரவர் வேலை மட்டும்
என்று ஆனது
நான் செய்த வேலை எல்லாம்
காற்றில் போனது

அவற்றை எண்ணி போற்ற
யாரும் இல்லையே
என என்னும் போது
நெஞ்சம் ஆறவில்லையே

பிறர் மனம் நோகும்படி
நடந்ததில்லையே
இன்று எனை நோக்கி வர
யாரும் இல்லையே

ஏதேதோ எழுதி பார்த்தனர்
இன்று கிழிந்த நோட்டு என்று
எடைக்கு போட்டனர்

உதவ கூட எண்ணம்
இல்லையா ...............?
நான் உதவியது நினைவில்
இல்லையா ...................?

இதை சொல்லி காட்டினால்
அது தவறு இல்லையா ...............?
கோபத்தை சொல்லில் காட்டினால்
அது தவறும் இல்லையா .........?

நல்லவனாய் வாழ்ந்த போதிலும்
இங்கே நன்றி என்ற ஒன்று இல்லையே
வள்ளுவன் சொன்னதெல்லாம் செய்தபோதிலும்
யாரும் வள்ளல் என சொல்வது இல்லையே
உன்னை எட்டி கூட பார்பதில்லையே

என்ன செய்து ஏது
கிடைத்தது
இங்கே நல்லவனாய் யாரு
இருப்பது ...........................?

எழுதியவர் : கவியரசன் (16-Jul-14, 10:32 am)
பார்வை : 176

மேலே