ராகுல் - 2

'உங்க அப்பா என்ன பண்றார்?' என்றார் அமுதவாணன்.
'இல்ல சார், எங்க அப்பா....'
'உங்க அப்பா?'
'மூட்ட தூக்குறார் சார்'
'இத சொல்ல என்ன தயக்கம்?'.. ம்ம்ம்ம் சரி சரி'
................................................................................................................................................................................................
பள்ளிக்கூடம் முடிந்தும் அனைவரும் சென்றனர். ராகுலுக்கு மட்டும் எதோ இனம் புரியாத கவலை.
வீட்டில் ஒரே ஒரு அறை. சின்ன சிறு வீடு தான். அனால் அவர்கள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. ஒரே ஒரு கயித்து கட்டில். அது ராகுலுக்கும் அவன் அம்மா முத்துவுக்கும் உரியது. மற்றவர்கள் கீழேதான்.
................................................................................................................................................................................................
'ஹய்யா அப்பா வந்துட்டாரு' என்றான் விக்னேஷ். 'அப்பா மாம்பலம் வாங்கிட்டு வந்துட்டியா?' என்றான் ராகுல்.

'ம்ம்ம்ம் இந்த பிடி. சண்ட போடாம சாப்புடுங்க. ஏய்! புள்ள சோறு போடு. ஒரே அலுப்பா இருக்கு'
'டேய் டேய் ஏண்டா, கழுவாம சாப்புடுறீங்க? ஆளுக்கு ஒன்னு சாப்டுங்க. மீதி நாளைக்குதான்' என்றாள் முத்து.
'விடு சாப்ட்டும்'
'நீங்க சும்மா இருங்க'
'அப்பா. இன்னைக்கு ஸ்கூல்ல புது சார் வந்தாரா. அவரு எல்லாத்தயும் பேர் சொல்ல சொன்னார்.
நானும் சொன்னேன்பா. நீ மூட்ட தூக்குறேனு சொன்னதுக்கு எல்லாம் சிரிக்குதுங்கப்பா'
'இதுல என்னடா இருக்கு?'
'இல்லப்பா! நீயும் வேற வேல பாத்து இருக்கலாம்ல'
'உங்க அப்பன் படிக்கல! இதன் இருக்கு. பாப்போம். நீ நல்ல படி. அது போதும்.'
................................................................................................................................................................................................
மருதை எட்டாம் வகுப்பு வரை படித்தவர். கணக்கு நல்ல தெரியும். எதோ கொஞ்சம் தான் படிச்சி இருக்கார். அதுவே பெருசுதான், அவங்க கிராமத்துல. மூட்ட தூக்குனாலும், மனுசனுக்கு பொது அறிவி அதிகம். அரசியல் ஈடுபாடு அதிகம். ராகுலுக்கும் இதே ஆர்வம் தான், அவங்க அப்பாவ பார்த்து. சிலேட்டுல கணக்கு எழுதி பதில் எழுத சொல்வார். சரியாய் எழுதிட்டா பத்துக்கு பத்துன்னு போடுவார். இது வாங்கிட்டா ராகுலுக்கு ரொம்ப சந்தோசம்.
.
.
.
.................................................................................................................................................................................................
அது தீபாவளி சமயம். ராகுல் வெளியவே உக்காந்து இருந்தான். 'டேய்! உள்ள வாடா பட்டாசு ஏதும் பட்ற போகுது' என்றாள் முத்து... இல்லம்மா! நான் பாத்துட்டு வரேன். அப்பா நாளைக்கு வாங்கிட்டு வந்துருவார்ல?' ராகுல்
'அதுலாம் வாங்கிட்டு வருவார். உள்ள வா'
'வரேன்மா போ'
ராகுலும் விக்னேஷும் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
'அண்ணா! அங்க மாரி சங்கு சக்கரம் வக்கிறான். பொய் பக்கத்துல பாக்கலாண்ணா!' விக்னேஷ்
'டேய் அம்மா திட்டும்'
'அண்ணா வா அண்ணா'
................................................................................................................................................................................................
மாரி கொஞ்சம் வசதியான பையன். அவங்க அப்பா கவர்மென்ட்ல வேல பாக்குறார். வேடிக்கை பார்த்த சமயம், எதிர்பாராத விதமாக மாரி சுற்றி கொண்டிருந்த சாட்டை ராகுல் நெஞ்சின் மீதி பட்டு விட்டது.
நெஞ்சில் தீக்காயம்.'அய்யோ அண்ணா! அண்ணா!' அய்யயோ. அண்ணா நெஞ்சுல தீ! அம்மம்ம்மா.........
கொஞ்ச நேரத்தில் முத்து அங்கு வந்து சேர்ந்தாள். வந்ததுமே ராகுலுக்கு முதுகில் நாலு அடி. 'எப்பபாரு சொன்ன கேக்குறதே இல்ல. நேரம் தான். தீபாவளி சமயம். நான் எங்க பொய் செலவு பண்ணுவேன். சனியன் கேக்குதா சொன்னா. உங்க பையன் பாத்து வெடி வெடிக்க மாட்டனா? கோபம் மாரியின் மீதும், அவன் அம்மா பூங்கொடியின் மீதும் திரும்பியது. 'இல்லங்க உங்க பையன்தான் பக்கத்துல வந்துதான்' பூங்கொடி. 'அவன் வந்த நீங்க வைக்கிறதா?' வார்த்தை முற்றி பெரும் சண்டையில் முடிந்தது.
வீட்டிற்கு வந்ததும் ராகுலுக்கு சரியான திட்டு. நீ கேக்க மாட்ட, தெரியும் என சொல்லவும் மருதை வரவும் சரியாக இருந்தது.
................................................................................................................................................................................................
'என்ன ஆச்சு! எல்லாம் உம்முன்னு இருக்கீங்க?' மருதை
'ஒன்னும் இல்ல'
'அட என்ன புள்ள பெரியவன் அழுத மாதிரி இருக்கான்? டேய் தம்பி என்னடா ஆச்சு?'
'ஒன்னும் இல்லப்பா'
'உங்க பையன் சும்மா இருக்காம, பட்டாச வெடிக்கிறத பாத்து, நெஞ்சுல காயம் பட்ருச்சு'
'ம்ம்ம்ம் என்னடா ஆச்சு?'
'ஒன்னும் இல்லப்பா! மாரி தெரியாம வச்சுட்டான்'
'ஆஸ்பத்திரி போனீங்களா?'
'அதுலம் வேணாம்ங்க! சின்ன காயம் தான். பத்து வச்சு விட்ருக்கேன், ஆறிடும்'
'சரி! சரி! அப்பா உங்களுக்கு பட்டாசு வாங்கிட்டு வந்து இருக்கேன்! பத்தரமா வெடிங்க'
'சரிப்பா' என்றனர் ராகுலும் விக்னேஷும்.
'எம்புள்ள! இந்த புள்ள பேசவே மாட்டேங்குது'
'விடுங்க! இனிதான் பேசும்' முத்து

மறுநாள் - தீபாவளி

பட்டாசை மூவரும் பங்கு போட்டு கொண்டிருந்தனர். மூத்தவன் என்பதால் ராகுல் தான் பிரித்து கொடுப்பான். 'டேய்! சங்கு சக்கரம் உனக்கு 3 அவளுக்கு 2 எனக்கு 5. புஷ்பானம் உனக்கு 3 அவளுக்கு 2 எனக்கு 5. கம்பி மத்தாப்பு உனக்கு 2 ராதாக்கு 2 எனக்கு 6. ஊசி வெடி எனக்கு மட்டும் தான்.' 'ஹேய்.. இது போங்கு... என்னா உனக்கு மட்டும் எல்லாத்துலயும் அதிகம். எங்களுக்கு கம்மிய தர?' விக்னேஷ்
.
'நீ சின்ன பையன்டா. அதன் கம்மி' ராகுல்
'சரி! வெடியாச்சும் கொஞ்சம் தரலாம்ல'
'இல்லடா. மேல பட்டுடும். அம்மா திட்டும் வேணாம்'
.
.
.
எப்படியும் சமாதான படுத்துவதில் வல்லவன் ராகுல். வானவேடிக்கை மாறி மாறி பொழிய, பட்டாசு சத்தம் காதை கிழிக்க தீபாவளி கலை கட்டியது. வெடிகளில் சுற்ற பட்டிருந்த நடிகர் நடிகைகளின் முகம், வெடித்து சிதறி வானத்தை பார்த்து கொண்டிருந்தது.

எழுதியவர் : sherish பிரபு (16-Jul-14, 7:59 pm)
பார்வை : 139

மேலே