முதல் தீபாவளி

பணக்கார பையன்களின்
வெடிக்காத,
பட்டாசுகளின் எச்சம்!

மாடிவீட்டு மங்கைகளின்,
பத்தாத கிழிந்த
ஆடைகளின் மிச்சம்!

பொய்த்து போன வெடிகளை,
சேகரித்த
இரவு நேரம்!

எதிர் வீட்டு அக்காளின்
மீந்து போன
பலகாரம்!

பக்கத்துக்கு வீட்டு சன்னலில்,
ஒளிந்து பார்த்த,
பாட்ஷா படம்!

சங்கு சக்கரம் இருக்குமோ?
கம்பி மதப்பு இருக்குமோ?
ஊசி வெடி வேணுமே!
என் அப்பா!
எப்போ வருவ?

நேரம் எட்டு ஆயிடுச்சு!
என் நிழலும் வாடி போயிடுச்சு!
என் அப்பா!
எப்போ வருவ?

கால் சட்டை இருக்குமோ?
பேண்டு சட்டை இருக்குமோ?
ஜீன்ஸ் பேண்டு வேணுமே!
என் அப்பா!
எப்போ வருவா?

காடு மேடு கல்லுடைச்சி,
கையி ரெண்டும் மூட்ட தூக்கி,
நெஞ்சி நிமிர சாலையிலே
என் அப்பா வர்றாரே!
சிங்க நடை போட்டுதான்,
சீறி பாஞ்சி வர்றாரே!

ஆச இன்னும் அதிகமா!
அவசரத்துல பிரிச்சேனே!
தேடி தேடி பார்த்தேனே!

ஓரத்துல பட்டாசு!
ஒரு மூலையில
சொக்க சட்டை!
எடுத்து நானும் போட்டேனே!

வா அப்பா! வெடி வெடிப்போம்!
வாய் வலிக்க கத்துவோம்!
புது சட்டை,
போட்டாச்சு!
தெரு மூல வந்தாச்சு!

தூரத்துல ஒரு குரல்!
பழக்கப்பட்ட என் ஆத்தா குரல்!
'ஏன்யா! கைலி கட்டி?'
'வேட்டி ஏதும் எடுக்கலையா?''
போ புள்ள! தூரத்துல!
பொழப்பு ஏதும் உனக்கு இல்ல!
கடை முழுக்க அலை கூட்டம்!
பின்ன எடுப்போம் பாத்துக்கலாம்!

எழுதியவர் : Sherih பிரபு (17-Jul-14, 3:15 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 62

மேலே