நல்லுணவுப்பழக்கம்

நல்ல உணவை உண்டு உயிர் வளர்ப்போம் தம்பி
இந்த ஊரு உலகம் காத்திருக்குது உன்னைத்தானே நம்பி

உணவை உண்ணும் முன்பு கையை நன்றாய் கழுவிட வேணும்
தட்டில் மிச்சம் மீதி வைக்காமல் நாம் ஒழுங்காய் சாப்பிட வேணும்

பச்சை கறிகாய் பழங்களுடனே பசும்பால் சேர்த்துக்க வேணும்
ஒருமுறை உண்டு மறுமுறை உண்ண உனக்கு இருமணி வேணும்

பாகல் புடலை பறங்கி எதிலும் அதனதன் சத்து உள்ளது
இது பிடிக்காது அது பிடிக்காது என்பதன் அர்த்தம் என்னது ?

இப்போதிருக்கும் வெக்கையிலே என்ன கிடைக்கும் சக்கையிலே
சூட்டுக்கு நல்ல இளநீரு, இங்கு சுகமாய் இருக்குது பதநீரு

எண்ணை பண்டம் நிறைய தின்றால் வயிறு வலிக்கும் கொழுப்பாலே
ஆனால் அதுதான் வாய்க்கு ருசியென்று உனக்கு நீயே மழுப்பாதே

நேரம் வைத்து உணவை உண்ணும் பழக்கம் இருந்தால் நல்லது
கண்ட நேரத்தில் கண்டதை உண்டு கஷ்டப்படுவதும் என்னது ?

காலை நேரம் வெறும் வயிற்றினில் நீரை குடிப்பதை விரும்பு
கீரைகளை நீ சாப்பிட்டாலே உடம்பு ஆகிடும் இரும்பு

உணவினை செரித்து உடலை காத்திடும் உறுப்புகள் உள்ளே ஏராளம்
நம்மை படைத்து, நல்லுணவையும் படைத்த கடவுளின் மனசு தாராளம்

நல்ல உணவை உண்டு உயிர் வளர்ப்போம் தம்பி
இந்த ஊரு உலகம் காத்திருக்குது உன்னைத்தானே நம்பி

எழுதியவர் : கவிரவி (17-Jul-14, 8:26 pm)
சேர்த்தது : RAVICHANDRAN
பார்வை : 61

மேலே