RAVICHANDRAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAVICHANDRAN
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  26-Jul-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2014
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் படைப்பாளி. சமூக ஆர்வலர் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனையாளர். அனைவரிடமும் அன்புடன் பழகும் மனம் படைத்த எனக்கு புகைப்படம் எடுப்பதிலும், வெளியூர்களுக்கு செல்வதிலும் ஆர்வம். பெரிய ஒருங்கிணைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு கூட்டு குடும்பங்களில் ஆர்வம். அரவணைத்து செல்லும் மனோபாவம். நாம சங்கீர்த்தனம்/ பஜன் பாடுவது, பாடல் எழுதுவது, மிருதங்கம், டோல்கி வாசிப்பது என சங்கீத கலைகளில் நிறைய அனுபவம், ஆர்வம், நிறைய கோவில்களிலும், விழாக்களிலும் செய்திருக்கிறோம். இறைவனுக்கு நன்றி.

என் படைப்புகள்
RAVICHANDRAN செய்திகள்
RAVICHANDRAN - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2014 8:29 pm

கண்ணே கனியமுதே என்றிட்ட காலம் கரையேறி
இன்று காட்டாற்றில் கவிழ்ந்ததுதான் காதல்

வெள்ளத்தில் சிக்கிய இருகிளை போல் அவனும் அவளும்
பாய்ந்து செல்லும் அலைகள் போல் இரு மனதும் உடலும்

பரபரப்பான இயந்திர வாழ்க்கையின் ஊடே
படபடக்கும் பட்டாம்பூச்சியாய் அவளும்
பாரமிழுக்கும் பொதிகாளைபோன்ற அவனும்

சங்ககால காதலுக்கு இருந்தது நேரம்
பார்த்து ரசிக்க பறவைகளும் இருந்த காலம்
இக்கால காதலில் ஏதுமில்லை தந்திரம்
இதுவே அது என்றிட்ட மாந்தருக்கு இது ஒரு சுதந்திரம்

காதலென்பது கயமையில்லை, கண்கட்டி வித்தையுமில்லை
ஆயினும் காதலின் வரையறை அறிதல் நன்று

காதலின் தவறா அல்லது காதலிப்பது தவறா என்ற
கற்

மேலும்

RAVICHANDRAN - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 8:48 pm

நட்பு என்பது இதுதானா நண்பா நீதானா
அன்பு என்பதும் இதுதானா அதுவே நீதானா

பள்ளியிலே படிக்கும்போது உன் பங்களாவை விட்டுவிட்டு
என்வீட்டு குட்டை திண்ணையில் படித்ததும் நீதானா

பள்ளிக்குப்பின் மறந்த பாடம், பல வேலை இழந்த சோகம்
பலநேரம் இருந்தபோதும் ஆறுதல் நீதானா

ஒரு சோற்றை இருவரும் உண்டு, ஒரே பாயில் இருவர் படுத்து
உறங்கும்போது பலநேரம் உதைத்ததும் நீதானா

பாதி வாழ்க்கை கடந்த பின்னும், பகல் கனவு கண்ட போதும்
பலநேரம் தோள் கொடுத்தது பரிவாய் நீதானா

இன்பம் வந்து இருந்த போதும், துன்பம் வந்து தொலைத்த போதும்
இரண்டிலுமே பங்கு கொண்டு இதமளித்தவன் நீதானா

காலம் பல கடந்த பின்னும

மேலும்

RAVICHANDRAN - RAVICHANDRAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2014 10:45 pm

லஞ்சமே தஞ்சமென்றடைந்தாயே மனிதா
வஞ்சமே லஞ்சமென என்றுணர்வாய் ?

கொஞ்சும் மஞ்சம் இன்று இருந்திட்டபோதிலும்
நெஞ்சம் கொஞ்சமும் வேண்டுமல்லவா உனக்கு !

அடுத்த தலைமுறை எனும் பிஞ்சுகளின் நிலைமயைப்பார்
அஞ்சிலிருந்து அவை ஆறாகும் நாள் வெகுதூரமில்லை !

மஞ்சுவிரட்டு போல் தோன்றும் உன் இன்றைய நிலை
நஞ்சென்று உன்காலை அது கவ்வும் நாளை !! எனவே மனிதா

லஞ்சமெனும் நஞ்சகற்றி
பஞ்சுபோல் லேசாக்கு உன் நெஞ்சினை
தஞ்சமென்றோர்க்கு தயை புரியும்
பஞ்சகணமெனும் அப்பகவான்
நாளை நிச்சயம் நனவாக்குவான் உன் நியாயக்கனவை !!

மேலும்

நன்றி 16-Jul-2014 11:45 am
நன்றி 16-Jul-2014 11:45 am
நன்று! 16-Jul-2014 11:40 am
நன்று! 16-Jul-2014 6:30 am
RAVICHANDRAN - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 10:45 pm

லஞ்சமே தஞ்சமென்றடைந்தாயே மனிதா
வஞ்சமே லஞ்சமென என்றுணர்வாய் ?

கொஞ்சும் மஞ்சம் இன்று இருந்திட்டபோதிலும்
நெஞ்சம் கொஞ்சமும் வேண்டுமல்லவா உனக்கு !

அடுத்த தலைமுறை எனும் பிஞ்சுகளின் நிலைமயைப்பார்
அஞ்சிலிருந்து அவை ஆறாகும் நாள் வெகுதூரமில்லை !

மஞ்சுவிரட்டு போல் தோன்றும் உன் இன்றைய நிலை
நஞ்சென்று உன்காலை அது கவ்வும் நாளை !! எனவே மனிதா

லஞ்சமெனும் நஞ்சகற்றி
பஞ்சுபோல் லேசாக்கு உன் நெஞ்சினை
தஞ்சமென்றோர்க்கு தயை புரியும்
பஞ்சகணமெனும் அப்பகவான்
நாளை நிச்சயம் நனவாக்குவான் உன் நியாயக்கனவை !!

மேலும்

நன்றி 16-Jul-2014 11:45 am
நன்றி 16-Jul-2014 11:45 am
நன்று! 16-Jul-2014 11:40 am
நன்று! 16-Jul-2014 6:30 am
RAVICHANDRAN - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2014 11:30 am

தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!

மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!

போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!

படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!

எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!

மேலும்

தத்துவ ஞானி அல்ல எதார்த்தவாதி தோழமையே ஹிஹிஹி :) 26-Mar-2016 2:46 pm
இளம் வயது தத்துவஞானியா நீர் ? உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் 25-Mar-2016 5:57 pm
ஹிஹிஹி அதுசரி நன்றி தோழரே :) 18-Oct-2014 6:23 pm
வரும்போது எதுவும் கொண்டு வருவதில்லை... போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை.. இடையில் இப்படிப்பட்ட நல்ல கவிதை வாசித்த சந்தோஷத்தில் வாழ்கையை வாழ்ந்துக் கொள்வோம்.... 18-Oct-2014 6:20 pm
RAVICHANDRAN - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2014 9:38 pm

கருவில் அன்னையிடம் கடன் கேட்டேன், எனக்கு உயிர் கொடுத்தாள்
கடந்து வந்து தந்தையிடம் கடன் கேட்டேன், எனக்கு உடை கொடுத்தார்
கற்க கசடற என்ப குருவிடம் கடன் கேட்டேன், கல்வி கொடுத்தான்
கவலையின்றி வாழ கடவுளிடம் கடன் கேட்டேன், செல்வம் கொடுத்தான்

அன்பெனும் கடன் கேட்டேன், அதை ஆருயிர் நண்பன் கொடுத்தான்
அழகான இரு மகவு கேட்டேன், அதை இனிய இல்லாள் கொடுத்தாள்
பணிபுரியுமிடம் கடன் கேட்டேன், பாங்காய் டிவி, பிரிஜ் கிட்டியது
பாரிலுள்ளோர் கடன் கொடுக்க, இவ்வினிய இல்லமும் கிடைத்தது

இப்போ -- ஊரெங்கும் கடன், உறவைச்சுற்றி கடன்
இப்பிறப்பே கடன் என்றிருக்க என் கடனை யாரடைப்பது ?
எனைப்படைத்த இறைவா ! என் கட

மேலும்

என் கடன் அடைப்பது உன் கடன் !!- சிறப்பு அய்யா 27-Jun-2014 6:00 pm
அருமை நட்பே 24-Jun-2014 3:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே