நட்பென்பது

நட்பு என்பது இதுதானா நண்பா நீதானா
அன்பு என்பதும் இதுதானா அதுவே நீதானா

பள்ளியிலே படிக்கும்போது உன் பங்களாவை விட்டுவிட்டு
என்வீட்டு குட்டை திண்ணையில் படித்ததும் நீதானா

பள்ளிக்குப்பின் மறந்த பாடம், பல வேலை இழந்த சோகம்
பலநேரம் இருந்தபோதும் ஆறுதல் நீதானா

ஒரு சோற்றை இருவரும் உண்டு, ஒரே பாயில் இருவர் படுத்து
உறங்கும்போது பலநேரம் உதைத்ததும் நீதானா

பாதி வாழ்க்கை கடந்த பின்னும், பகல் கனவு கண்ட போதும்
பலநேரம் தோள் கொடுத்தது பரிவாய் நீதானா

இன்பம் வந்து இருந்த போதும், துன்பம் வந்து தொலைத்த போதும்
இரண்டிலுமே பங்கு கொண்டு இதமளித்தவன் நீதானா

காலம் பல கடந்த பின்னும், காட்சிகளை தொலைக்கவில்லை
இனிய பல நட்புக்காலம் இன்னமும் நாம் மறக்கவில்லை

நாளை நம் தலைமுறை பாடும் ...
நட்பு என்பது இதுதானா நண்பா நீதானா
அன்பு என்பதும் இதுதானா அதுவே நீதானா

எழுதியவர் : கவிரவி (17-Jul-14, 8:48 pm)
சேர்த்தது : RAVICHANDRAN
பார்வை : 396

மேலே