அரி அழகு இரண்டு சொற்களில் ஒரு கவிதை

அரியும் அரியும் அரியே
==அரியின் அரியும் அரியே
அரியாய் அரிக்கும் அரியின்
==அரியும் அரியே அரியே
அரிதன் அரியும் அரியே
== அரிகள் அரியின் அரியே
அரியின் அரியும் ,அரியின்
=அரியும் அரியின் அரியே !

அரியின் அரியின் அரியோ
==அரிஅரி அரிகள் அரியே
அரிஅரி அரி அரி அரிதன்
==அரியென அரியே அரியே
அரிகள் அரிகள் அரிகள்
==அரிகள் அரிகள் அரிகள்
அரிகள் அரிகள் அரியோ
==அரிஎனும் அரியாய் அரியே.

அரியில் மா மா மாஅரி
==அரியின் மாஅரி மாஅரி
அரி மா மாமா அரியே
==அரிஅரி அரிஅரி அரியே
அரிமேல் மா மா மாமா
==அரிஅரி அரிக்கும் அரியோ
அரியை அரியுறு மரியாய்
==அரியை அரிக்கும் அரியே!

***************************

அரி ,மா என்னும் இந்த இரண்டு சொற்களுக்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டு புனைந்துள்ளேன். இந்தக் கவிதை.
அதன் எளிய நடையை கீழே தருகிறேன்
அழகு
காற்றும் கிரணமும் அழகே
==கடலும் கனலும் அழகே
அரியாய் அரிக்கும் கடலின்
==அலையும் அழகே அழகே
சிவனின் துயிலிடம் அழகே
==சக்கரம் தேரின் அழகே
சோலையின் பச்சையும் அழகே
==சந்திரன் ஒளியும் அழகின் அழகே

மூங்கில் காற்றின் கள் போதை
==மென்மை மேன்மை வரிகள் அழகே
மஞ்சள் மாலை மழைத்தூவல் அழகு
==மரகத படுக்கை அழகே
குதிரை சிங்கம் ஆடுகள்
==குரங்குகள் பன்றிகள் பாம்புகள்
கிளிகள் வண்டுகள் வரிசையோ
==பொன்னெனும் நிறம்போல் அழகே

அரிசியின் மேன்மை அன்னம் பேரழகு
==அரவத் தன்னம் தவளை எதிர்மறை அழகு
கூர்மை அறிவின் மகத்துவ பெருமை அழகே
==நெல்லறுக்கும் காலம் கதிரும் அழகு அழகு அழகே
மலைமேல் திருமால் சிலை பேரழகு
==நயன வண்டு விதைக்கும் விதையோ
நமனை (எமன்) வெல்லும் அழகாய்
சயனம் பகைக்கும் அழகே !

மெய்யன் நடராஜ் (இலங்கை)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jul-14, 1:48 pm)
பார்வை : 421

மேலே