காத்திருக்கிறேன்

என் அன்பானவனே
உன்னை காதலிக்கிறேன்
என்பதை எப்படி உன்னிடம்
சேர்ப்பேன் என்று தெரியாமலே
போகின்றன என் நாட்கள்!


என் கண்கள் உன்
கண்களை சந்திக்கும் போது
கூடவா உணரமுடியவில்லை
உனக்கான என் காதலை!


நீ என் அருகில் இருக்கும்
போது என் நெஞ்சம்
துடிக்கும் சப்தத்தில் கூடவா
உன்னால் உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!


உன்னை பார்பதற்காக பல
மணி நேரம் காதிருப்பேனே
அதில் கூடவா உன்னால்
உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!


யாரிடமும் பேசாமல்
உன்னிடம் மட்டுமே
வலிய வந்து பேசுவேனே
அதில் பேசுவேனே
அதில் கூடவா உன்னால்
உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!


எப்பொழுது என் காதல்
உனக்கு புரியும் என்று
தெரியாமலும் என்றாவது
ஒருநாள் எனை நீ
ஏற்றுக் கொள்வாய் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
தினம் தினம்!!!!!!!

எழுதியவர் : gayathri (18-Jul-14, 2:07 pm)
சேர்த்தது : snehapriya
Tanglish : kaathirukiren
பார்வை : 130

மேலே