ஒரு பாக்கெட் நாப்கின்
அண்ணே,
ஒரு பாக்கெட் நாப்கின்
ரெண்டு ஜில்லெட்,
என்று
கேட்கும் பெண்ணிடம்
நமட்டுச் சிரிப்பு
சிரிக்காமல்
எடுத்து தரும்
கடைக்காரர்
மற்றும் அருகில்
நிற்போர் பார்ப்போர்
என
கண்டு கொள்ளாமல்
அவரவர் வேலையைப்
பார்க்கும் நாளில்
காமம் அழகியலைப்
பெற்று விடும்.
காதலைப் போல.
செந்தேள்