வாழத் தெரிந்தவன்
கோடு போட்டு வாழும் வாழ்வு
வாழ்க்கையின்அர்த்தம் புரிந்து
குறிக்கோளுடன் வாழ்வது
எல்லாம் சகஜம் என்று வாழ்வதும்
எது வந்தாலும் சமாளிப்போம் என்று
வாழ்வதும் இலக்கு அற்ற வாழ்கை
மனிதன் மனிதனாக வாழவேண்டும்
நாணயமாகவும் நாகரீகமாகவும்
கொள்கை தவறாது வாழவேண்டும்
சுயநலமின்றி சுதந்திரமாய் வாழ்வதும்
மனிதனை உயர்ந்த நிலையில்
மகான்கள் வரிசையில் வைத்து விடும்
அவனே மாண்புள்ள மனிதன்
போற்றும் புகழுடையவன்
மனிதருள் மகத்துவம் உடையவன்
மரியாதையை கொடுத்து
மரியாதையை வாங்கத தெரிந்தவன்
தன்மானம் உள்ள மனிதன்
வாழத் தெரிந்தவனுக்கு
வாழ்கையில் தோல்வி இல்லை
வெற்றி யாவும் அவன் பக்கம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
