தனிமையில் என் மனம்
கண்டும் காணாது சென்றவள்
விஷத்தை விதைத்தாள் என் நெஞ்சில்.....!
தாங்கி கொள்ள இயலா இத்துயரம் - என்னை
மண்ணோடு சேரச் சொல்கிறது...!
ஏணியாய் என்னை ஏற்றம் பெறச் செய்தவள் - நான்
கல்லறையில் துயில் கொள்ள காரணமாகிறாள்.....!
எண்ணிக் கூடப் பார்க்கவில்லை
உடனே பிரிவாள் என்று....!
என் மனமோ!
தனிமையில் இன்று.....!