திருமண பிரிவு
மலர் தூவி வாழ்த்தும் போதே
மனம் பாதி ஆவேனே!
கை சேரும் நொடியினில் -
என் மனம் பிரிந்து போவாளோ?
இதயங்கள் சேராமல் உறவுகள்
இணைந்து என்ன பயன்???
விதிவசம் மதிவசம் என உதித்த வண்ணம்
வாழ்ந்திடவோ? உற்றார் கூடி இணைத்தாரோ?
உதடு தாண்டி பதிந்த முகம்
உள்ளம் விட்டு மறைந்திடுமோ?!
இணைத்தோம் உறவு எனக்கூறி
இன்புறும்பெரியோரே! நீங்கள்
முறித்த உறவு எத்தனையோ?
""உள்ளங்கள் சேராமல் உதடுகள் ஒட்டிடுமோ?""
""உதடுகள் ஒட்டிட்டால் உள்ளங்கள் ஒட்டிடுமோ?""
அதிகாலை கதிர்ஒளியில்,
இரவு முழுநிலவில் உன் நினைவு வந்திடுமே
என் சொல்லி தேற்றிடுவேன்!!!!!
மாதங்கள் கடந்தாலும்
என் மனமது மாறிடுமோ?-என் மங்கை
நினைவு நீங்கிடுமோ?- வருடங்கள் பல ஆனாலும்
என் வருத்தங்கள் ஓடிடுமோ? வசந்தமெனும்
அவள் நினைவை புது மனைவிஎனும்
புயல் மாற்றிடுமோ?
மதம் வேறு எனச்சொல்லி
மதம் பிடித்து அழைவோரே !
சாதி வேறு என சொல்லி
சதி விரித்து ஒழிப்போரே!!!!!!
என்னை நீங்கள் பிரித்திடலாம்
என் காதலை என் செய்வீர்???
நீங்கள் கூறிய அத்தனையும் மறுக்காமல்
கேட்டிட்டேன் !! என் ஆசை கூறிடுவேன்
மறுக்காமல் செய்திடுங்கள்!
நான் மண வாழ்வு புகுமுன்
என்னவள் மறுவாழ்வு புகுந்திடுவாள்!
அவளை எரிக்காமல் புதைத்திடுங்கள்!!!!!!!!
என்னுயிர் பிரியும் வரை அவள் புதைந்த
இடம் பார்த்து "" தினம் தினம் சாவதற்கே""!!!!!!!!!!