செந்நீரை சிந்தும் என் இதயம் 555
பெண்ணே...
நான் செல்லும்
இடமெல்லாம்...
என் கண்முன்னே
வந்து நிற்பாய்...
நான் பார்பதற்காகவே...
இன்று நான் உன்னை
பார்க்க நினைத்தாலும்...
உன்னை மறைத்து
கொள்கிறாயடி...
உன்னை நினைத்து நான் கட்டிய
காதல் என்னும் மனகோட்டை...
வெயிலிலும் மழையிலும்
ஒதுங்க உதவாது என்று
உணரந்தேனடி...
என்னையே நான்
மறந்தேன்...
என்னை நினைவுபடுத்த
யாரும் இல்லை...
நான் சந்திக்கும்
நபர்கள் எல்லாம்...
உன்னை நினைவு
படுத்துகிறார்கள்...
உன் வாசல் வழி
நான் வந்தால்...
மூடி இருக்கும் உன் வீட்டு
ஜன்னல் திறக்கிறது...
திறந்திருக்கும் உன் விழிகள்
மூடிகொள்கிறது ஏனடி...
என் இதயத்திற்கு மட்டும்
பேசும் சக்தி இருந்தால்...
வாய்விட்டு கதறுமடி...
சதைகளுக்கு நடுவில்
சிக்கி கொண்டு...
செந்நீரை சிந்துதடி
என்னில் தினம் தினம்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
