வெறுக்கமாட்டேன்

கனவும் இரவும் கை கோர்த்து,
கடக்கும் போது மனம் ஏற்காது..

எனையும் அவளையும் சேர்க்காது,
வலிகள் சற்றும் அறியாது,
உதிரம் மட்டும் கண்களில் வழிய,
உறக்கங்கள் நித்தம் கிடையாது..

உனதொரு பெயரை மட்டும் கொண்ட,
என் உளறல்கள் என்றும் சளைக்காது..

உறவை உடைத்து நீ போனாலும்,
உன் நினைவு என்றும் மாறாது..

துணிந்து நீ என்னை வெறுத்தாலும்,
என் தனிமை என்னை வெறுக்காது..

விழியும் விழியும் பார்க்காது,
விளைந்த காதல் நிலைக்காது..
விதியும் இதுவென வெறுக்காது,
வாழ்ந்திருப்பேன் உன் நினைவோடு.....!!!

எழுதியவர் : பிரதீப் (19-Jul-14, 8:34 pm)
பார்வை : 431

மேலே