கசகசவா

உன் பையன் பேரென்ன கசகசவா?
இல்லய்யா கசமுசா.
அதென்ன கசமுசான்னெல்லாம் பேரு வைக்கறதா? நல்லாவா இருக்கு?
ஏய்யா நிங்களெல்லாம் தமிழர்கள் தான். இந்தியாவ்லெ பெரும்பாலோரின் பயன்பாட்டில் இருக்கும் ஒரே செம்மொழி என்ற தகுதியும் தமிழுக்கு இருக்கு. அப்படி இருந்தும் 98% சதவீதம் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாயிலெ நுழையாத, அர்த்தம் தெரியாத பேரையெல்லாம் வச்சு “ஸ்வீட் நேம்”ன்னு சொல்லி பெருமப் படறாங்க. ஊரோட ஒத்துப் போகணும் இல்லையா. அதுக்குத் தான் நானும் என் பையனுக்கு கசமுசான்னு பேரு வச்சிருக்கேன். கசமுசா ...... ஓ, வாட் எ ஸ்வீட் நேம்!