மாற்றங்களை வேண்டுபவளாய் நான்

வண்ணக் கனவுகளோடு....... வசந்த எண்ணங்களோடு.... மார்க்க கடமைகளை கூற வந்தேன்........
என் பணியை கரம்பிடித்தவளாய்......!

கரம்பிடித்த நாளிலிருந்து ஒவ்வொரு நொடியும் கலங்குகிறேன்.. எங்கே என் கனவுகள் கலங்கிவிடுமோ என்று"?

இம்மையில் நம் பெயர் ஒளிர முயற்சிகளைத் தேடி அலைகின்றோம்... ஆனால் மறுமைகால பதிவேட்டில் நம் பெயர் ஒளிர என்ன செய்ய போகின்றோம்..........

குளிர் என்று தொழுகைக்கு விழிக்க மறுக்கும் நாம் நாட்களை என்னியவர்களாய்..... நித்திரை களைத்து இரவெல்லாம் விழிக்கின்றோம் சங்கீதத்திற்கும் சினிமாவிற்கும்!

பள்ளி வாயிலில் காணும் காலணிகளை விட மது அறை வாயிலில் காணும் காலணிகளே ஏராளம்!!!
இதயத்தை சுத்திகரிக்கும் தொழுகையை நிறைவேற்ற ஐயப்படுவது ஏன்"?

துன்பத்தின் போது இன்பம் காண களைப்பாற மட்டுமா நமது தொழுகை"?
கதைகளை கேட்க சுறுசுறுப்பாகும் நமது விழிகள் குர்ஆனை கற்க அழைத்தால் மட்டும் மறுப்பது ஏன்?
இவ்வுலகில் வெளிச்சம் கொடுக்க பல்வேறு மாமேதைகள் வரிசையில்...... நாளை நாம் கபுரில்வெளிச்சம் கொடுக்க யார் வருவது சிந்தியுங்கள் !!

தினம் தினம் நானும் நன் முறையில் சொல்வதற்கு அழைக்கிறேன்......ஆனால் என்னை வன்முறையில் மாற்றுகிறது சிலரின் செயல்கள்...

என் இனிய சகோதர!! சகோதரிகளே!!
நம் வாழ்க்கையோ சோதனைக் கூட்டம்...!
ஒரு நாள் மட்டும் வாழ்ந்து விட்டு போக நாம் ஒன்றும் ஈசல்கள் அல்ல.....!
மனிதர்கள்...!
இனியாவது மாறுவோம்........
ஐம்புலன்களையும் ஐஸ்வரியமாக்க
ஐவேளைத் தொழுகையையும் ஐக்கியமாக்குவோம்....!
விழித்திருக்கும் பொழுதில் ஒவ்வொரு துளியிலும் தஸ்பீஹ் சொற்களை முழக்க வைப்போம்.....!
அல்லாஹ்வின் அடிகைகளாய்......!
திருமறைக் குர்ஆனின் காவலர்களாய்...!
நேர்மையின் உறைவிடங்களாய்......!
நல்லொழுக்கத்தின் மேதைகளாய்......!
சத்தியத்தின் துணைவியர்களாய்.....!
நீதி வர்க்கத்தின் பிரப்பிடங்களாய்... என்றென்றும் மாறுவோம்...........
மார்க்க கடமைகளை நிறைவேற்றுபவர்களாய்...........!

எழுதியவர் : சைனுல் (21-Jul-14, 9:19 pm)
பார்வை : 60

மேலே