உறவுகள் ஓராயிரம்

உன்னை தரித்தவள் தாய்
பேணிகாப்பவர் தந்தை
மண்ணில் தவழும் மழலைகள்
அன்பின் அரவணைப்பாய்
நல்நட்பாய் மலரட்டும் உறவுகள் !!

உன்னை புகழ்ந்து
உடமையை கவர்ந்து
உனைமடமையாக்கும்
உறவுகள் ஒருபுறம்

என்னில் பாதி
நீ என ஏக்கம் கொண்டு
எடுத்து வளர்க்கும்
தாயுள்ளம் கொண்ட
உறவுகளும் உண்டு

உன்முன் ஒன்று பேசி
பின் கொன்று தொலைக்கும்
நயவஞ்சக உறவுகள் ஒருபுறமுண்டு

உனக்கென உருகி
தனக்கென சேர்த்த யாவையும்
உனதாக்கும் மெய்யான
உறவுகளும் உண்டு

நீ வளர்ச்சி காணும் போது
எழுச்சி காணும்
நீ வீழ்ச்சி கண்டால்
சூழ்ச்சி செய்யும்
உறவுகளும் உண்டு

பல பல உறவுகள்
எதிர்பார்ப்புடன்
எதிரியாக்கும் உன்னை
எதையும் எதிர்பாராத
உன் ஏற்றத்தை எதிர்நோக்கும்
ஒரு உறவு உண்டென்றால்
அதுவே நல்நட்பு !

எழுதியவர் : கனகரத்தினம் (22-Jul-14, 10:20 am)
Tanglish : uravukal oraayiram
பார்வை : 195

மேலே