ஏழைச்சொல்லும்
நலிந்த பரிதாபங்கள்
கேலிகளாக்கி
விற்கப்படுகின்றன....
விளம்பரதாரர் தனித்திறன்
போட்டிகளில்.....!!!
அருமையெனப் புகழ்ந்து
அரியணைக்குப்
போதவில்லையென
கழற்றிவிடப் படுகிறது
கிராமத்து வெள்ளந்திகள்.....!!!
வறுமைக்கு காய்ந்திருந்த
உதடு ஒன்று
தேவையாய் இருக்கிறது....
பகட்டுச் சாயங்கள்
முன்னிறுத்திப் பிடிக்க....!!!
தாழ்மைச் சிறைக்கம்பிகளில்
நூல் சுற்றிக்கொண்டது
எப்பொழுதாவது
அம்பலமேற நினைக்கும்
ஏழைச் சொல்லும்...!!!
கிழிசல்வழி சுருக்கி
ஒளிக்கற்றை பீய்ச்சி
முகத்திரைகள் கிழிக்கும்
நாளொன்று விடியும்
ஒரு
அலுமினியத் தட்டு
உருகல் தினத்தில்.....!!!

