சிரிப்பு
மனிதன் சிரிப்பதும் சிரிக்க வைப்பதும்
ஆரோக்கியமான செயலாகும்
சிரிக்க சிந்திக்க தெரிந்த குணம்
மனிதனுக்கு மட்டுமே உண்டு
அவன் கொண்ட இவ்விரண்டு குணங்களும்
மற்றும் உயிரினங்களிடம் இல்லை
இதனால்தான் மனிதன் உயர்ந்தவன்
பகுத்தறிவு மிக்கவன் உன்னதமானவன்
கவலையை மறக்க சிரிக்கிறோம்
சிந்தனைகள் சிரிப்பாக மாறுகிறது
அப்போது மனம் இலேசாகிறது
கவலை மறக்க சிரிப்பு வேண்டும்
சிரிப்பின் அருமை தனி சுகம்
மருந்துக்கு இல்லாத மருத்துவக்
குணங்கள் சிரிப்புக்கு உண்டு
சிரிங்க சிரிங்க சிறப்புடன் வாழ
கோபத்தை அடக்கும் கொள்கைய மாற்றும்
சிந்திக்க வைக்கும் செயல்களை ஆற்றும் சிரிப்பு
நாம் சிரிக்க சிரிக்க நம் உடலின்
உறுப்புகள் அனைத்தும் புத்துணர்வு பெற்றிடுமே ,
சிரிப்பினால் நம் உடலும் உள்ளமும்
வலிமை பெறுகிறது ,நம்மைசுற்றி உள்ள
மனிதர்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது
சிரிப்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம்