இரு மனிதன்

வறுமையெனும் சூரியன் சுட்டெறித்த போதும்...
வற்றாது பெருகுதிங்கே இந்த அதிசய கொடிய நதி...

பசியும் பட்டினியும் நதியாய் புரண்டோடும் ஏழை வாழ்வினிலே -
சொகுசாய் துள்ளி விளையாடும் ஒரு கூட்டம் அந்நதியினிலே ...

உணவில் உப்பில்லை என்றெறியும் ஒரு கூட்டம் வீட்டினிலே-
அதை குப்பையில் தேடி உண்டிடும் மறு கூட்டம் வீதியிலே...

வயற்று உணவிற்காய் ஓடுதிங்கே பெரும் கூட்டம் பாரினிலே-
வயற்றை குறைத்திட ஓடுதிங்கே சிறு கூட்டம் சாலையிலே...

பெற்ற பிள்ளைக்கு பாலில்லை தாயின் மார்பினிலே-
பூனைக்கு பால் வாங்கும் ஒரு கூட்டம் வெளிநாட்டினிலே ..

கல்விக்காய் மூட்டை சுமக்குது ஒரு கூட்டம் நாட்டினிலே-
கல்வியை பண மூட்டைக்கு விற்குது மறு கூட்டம் பள்ளியிலே ...

அரச திட்டங்கள் நூறு இங்கே வறுமையை நீக்கிடவே-
இருந்தும் இல்லாமை என்ற சொல்லே பெருகுகிறது நாட்டினிலே...

இட்ட திட்டமெல்லாம் பட்ஜெட்டில் மாத்திரம் வாழுதிங்கே-
நம் மந்திரி வீட்டினில் செல்லவம் மட்டும் பெருகுதிங்கே ...

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (23-Jul-14, 11:50 am)
Tanglish : iru manithan
பார்வை : 116

மேலே