காதல் பதட்டம்

நான் கண்ட முத்து
என் நெஞ்சில் பூத்து
தினம் கனவில் வந்து
நிற்கிறாள் கை கோர்த்து
அவளோ பூங்கொத்து
சுவை மிகு மஸ்கத்து (ஸ்வீட்)
நடையில் மிஞ்சிய வாத்து
மயங்கினேன் அதை நான் பார்த்து
காதலை இதயத்தில் விதைத்து
கண்களால் பேசும் நீயே என் சொத்து
நிஜமாக என் கைபிடித்து
வருவாயோ வண்ணமாக ஜொலித்து
இத்தனையும் நினைவாக புதைத்து
நிற்கிறேன் இங்கு பதைத்து
அவள்முன் இதமாக என்காதலை வைத்து
எப்படி சொல்வேன் கதைத்து .