உன் மடியில் உறங்க வேண்டும்
கொங்கு மலை சாரலில்
பிறந்திட்ட தேனே !
கொற்றவன் நானும் -உன்னை
கட்டியணைக்க தாவுகிறேன்!
சுண்டும் நாணயம் போல் -நீ
துள்ளி ஓடக்கண்டு
துரத்தும் வேடுவனாய்
தூண்டுதடி எம்மனசு !
கட்டி கரும்புச்சாராய்
கனி வுறும் தமிழ் மொழியை -உன்
செப்பு தகடு நாவில்
சிதறிட பார்க்கிறேன் !
முத்தமிழ் வேந்தருக்குள்
முளைத்திட்ட தமிழ் மொழியை
முகில் போல் வந்து -எம்முன்
பொழிவதை பார்க்கிறேன் !
கட்டி தங்கமே !கரும்பே !
புனல் வடியும் பூவே !-நீ
புன்னகைத்தால் போதும்
எனக்குள் ஒரு புதுகவிதை !
நீ சரியென்றால் போதும்
மேகத்தை மலையாக்கி !
வானவில்லை நதியாக்கி!
சந்திரனை துணையாக்கி -உன்
மடியில் சாய்ந்து நான்
உறங்க வேண்டும் ?
இரா .மாயா