பூமி நோக்கிய விவசாயி

ஊரின் கிழக்கே நஞ்சை பூமி,
ஆட்டம் பாட்டமாய் அறுவடை நடக்கும்

லாபமாய் நெல் அளப்போம்.
உழைத்தவர்க்கு ஊதியமும் நெல்லே.

நாட்கள் போக ஒரு நாள்
கழனிகள் கடந்த மந்தையில்
இந்தி முதலாளிகள்
கம்பெனிகள் வந்தன.
உழைத்தவரை அழைத்தனர் .
கூலிகள் தந்தனர்.

ஆட்டம் பாட்டம் நின்றது.
ஆளில்லை கழனியிலே.

முடிவொன்று செய்து
மாமன் மச்சான்
சித்தப்பன் ,பங்காளி
எல்லாம் இறங்கினோம்
பிள்ளைகள் பெண்களும் சேர.

அறுவடை தொடர
மறுபடி நெல்
லாபமில்லை .
இருப்பினும் நட்டமில்லை

'எத கடைல வாங்கனாலும் அரிசி வாங்கக் கூடாது'
ஊரின் எழுதாக் கோட்பாடு...
சொச்ச குடும்பங்கள்
எம்போல் கடைபிடிக்க
மற்றவர் கம்பெனி கூலியில்
வாங்கினர் கடைகளில்...அரிசியும்.

நிலங்களிலும் சொச்சம்
மட்டும் நஞ்சையாய்
ஏனைய கரம்பையாய்
ஏதோ வாழ்வு
எல்லோர்க்கும் செல்ல...

தீடிரென வந்தனர்
பன்னாட்டு முதாளாளிகள் படை
அரசு அதிகாரிகளும் சூழ

செல்போன் கம்பெனி உங்க ஊர்ல
கொடுத்து வச்சவங்க நீங்கள்லாம்
ஊரே டவுன் ( town ) ஆயிடும்
உங்க எல்லாருக்குமே வேல.!

அரசாங்கம் நிலங்களை எடுக்குமாம்
கையில் பணமும் தருமாம்
மறுத்தாலும் எடுக்குமாம்
அரசாங்க சொத்துதான் எல்லாம் ?

திட்டம் ஏதும் போட்டா
நஷ்டஈடும் போயிடும்
எச்சரித்து கலைத்தனர்.
எம்பூமியை எடுத்தனர்

கண்ணீரோடு கொடுத்தோம்.
கடைகளில் நிற்கிறோம்...
அரிசிக்காக.!

எழுதியவர் : ராம்வசந்த் (24-Jul-14, 7:40 pm)
பார்வை : 93

மேலே