கார்கில் மலை

நேரிசை ஆசிரியப்பா
போர்ப்படை திரட்டி எதிரே ஏகினும்
கார்கில் மலையைப் பற்றினோ ரிலரே
பணிசூழ் மலையைக் காக்கும் வீரர்
துணிவே துணையென்று நிற்றல் காணீர்
வீருடைக் குருளைக் கும்பல் காக்கும்
சீருடை மலையாம் கார்கில் காணீர்
மேனாட்டுப் படையும் தோல்வி யுற்ற
தேனாறு ஊரும் மலையிஃது காணீர்
கிழக்கிருந்து ஏகுமின் ஏகுக
கீழ்மை தழுவா பாரதர் வீரரே !
-விவேக்பாரதி